மழை பிடிக்காத மனிதன் எப்படி இருக்கிறது

மழை பிடிக்காத மனிதன் எப்படி இருக்கிறது

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன் இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், மெகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் மாறியவர், விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர். இந்த இருவரின் கூட்டணியில் ஒரு புதிய தளத்தில் நல்லதொரு படம் வரும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருந்தது. விஜய் ஆண்டனி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, நடித்து வந்தார். ஆனால் இறுதியாக அவர் நடித்த சில படங்கள் கதைகளிலும் சரி, திரைக்கதையிலும் சரி ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. சோகமாக அந்த லிஸ்ட்டில் இந்தப் படமும் சேர்ந்து இருக்கிறது. மழை பிடிக்காத மனிதன் படத்தில் முதல் ஒரு நிமிடத்திற்கு அனிமேஷன் காட்சிகள் வருகிறது. அந்த அனிமேஷன் காட்சிகள் இந்த படம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தின் தொடர்ச்சி என்பதாக சொல்கிறது. ஆனால்…
Read More