16
Dec
ஒட்டி ஒட்டி நானும் வரேன் என்ற சியான்கள் பட பாடலை KJR ஸ்டுடியோஸ் ராஜேஷ் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தோடு உருவாகிறது. அந்த வகையில் தற்போது மாறுபட்ட கதை களத்தோடு கரிகாலன் அவர்களின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சியான்கள். இந்த படத்தை வைகறை பாலன் என்பவர் இயக்கியுள்ளார்.முத்தமிழ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒட்டி ஒட்டி நானும் வரேன் என்ற பாடலை கே கே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் ராஜேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த காதல் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சியான்கள் திரைப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ்…