ஆர்.கே.நகர் படத்துக்கு சென்சாரில் ‘யு/ஏ’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.

ஆர்.கே.நகர் படத்துக்கு சென்சாரில் ‘யு/ஏ’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்.கே.நகர் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்ட தொகுதி ஆர்.கே.நகர். இந்த தொகுதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாகும். அவருடைய மறைவுக்கு பிறகு இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா அதிகமாக இருந்ததால் இந்த தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர், தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியின் பெயரை தான் தயாரிக்கும் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார் வெங்கட் பிரபு. ‘சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் தயாரித்த வெங்கட் பிரபு, தன்னுடைய தயாரிப்பில் இரண்டாவது படமாக வைபவ் நடிக்கும் படத்திற்கு ஆர்.கே.நகர் என்று பெயர் வைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் பிறந்த நாளின்போது வெளியான ஆர்.கே.நகர் படத்தின் டீசரில் இடம்பெற்ற, “நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா... நீ என்ன எம். ஜி. ஆரா...” என்கிற வசனம்…
Read More