27
Dec
தயாரிப்பு : ஜி பி ஆர் கே சினிமாஸ் நடிகர்கள் : சமுத்திரக்கனி, அனன்யா , பாரதிராஜா , கருணாகரன், இளவரசு, தம்பி ராமையா, வடிவுக்கரசி, ஸ்ரீமன், சுலீல் குமார் மற்றும் பலர். இயக்கம் : நந்தா பெரியசாமி இந்தக்கால கட்டத்தில் மனிதனின் நேர்மை என்பது எத்தனை கேலிக்குறியதாகி விட்டது என்பதை பலமாக பேசியிருக்கும் படம் திரு மாணிக்கம். சமுத்திரக்கனி மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் கேரளாவில் வாழ்ந்து வருகிறார். குடும்ப பிரச்சனை, கடன் சுமை என பல பிரச்சினை இருந்தாலும் நேர்மையாக வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. லாட்டரி சீட்டு விற்பனை செய்வதுதான் இவருடைய தொழில். ஒரு நாள் இவருடைய கடைக்கு வரும் பாரதிராஜா லாட்டரி சீட்டு வாங்குகிறார். அவரிடம் பணம் இல்லாததால் அவரது சீட்டை எடுத்து வைக்க சொல்லிச் செல்கிறார். கடைசியில் அந்த சீட்டுக்கு ஒன்றரை கோடி பணம் கிடைக்கிறது. பாரதிராஜாவிடம் கொண்டு சேர்க்க சமுத்திரக்கனி புறப்படுகிறார். ஆனால் மனைவி…