25
Jan
நம் பண்டைய கால புனித நூலான இராமாயணம் பல விதங்களில் மீளுருவாக்கம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் குழந்தைகளும் ரசிக்கும் வண்ணம் கார்டூன் பாணியில் உருவாகியிருக்கும் “தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா”. ராமனின் கதை நமக்கு புதிதல்ல அதனால படம் உருவாகியிருக்கும் விதம் தான் முக்கியம், நம் பாரம்பரியத்தை ஜப்பானிய கலை நுணுக்கத்தோடு உருவாக்கியுள்ளது இந்தப்படக்குழு. யுகோ சகோவால் உருவாக்கப்பட்டு & கொய்ச்சி சசாகி மற்றும் ராம் மோகன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், 450 இந்திய -ஜப்பானிய கலைஞர்கல் இணைந்து, கிட்டத்தட்ட 100,000 கையால் வரையப்பட்ட செல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய கலை நுணுக்கத்தை, இந்தியாவின் காலத்தைக் கடந்த கதைசொல்லலுடன் பாரம்பரியத்தை இணைத்து ஒரு காட்சி விருந்தாக உருவாக்கியுள்ளனர். படம் முழுக்க கார்டூன் வியந்து பாரக்கும் விஷுவல்கள் மற்றும் அதிர வைக்கும் போர் காட்சிகளை காட்டி விருந்து வைத்துள்ளது படக்குழு. ராமரின் பிறந்த இடமான அயோத்தியில் ஆரம்பித்து, மிதிலா, ராமர்…