இளையராஜாவின் இசையில் மற்றுமொறு பாலு மகேந்திராவின் மாணவர் இயக்கும் முதல் படம் !’பேரன்பும் பெருங்கோபமும்’ !

இளையராஜாவின் இசையில் மற்றுமொறு பாலு மகேந்திராவின் மாணவர் இயக்கும் முதல் படம் !’பேரன்பும் பெருங்கோபமும்’ !

  பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த திரைப்படத்தை ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி…
Read More
கொரோனா தொற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

கொரோனா தொற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

  2020-2021-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவர் Dr.K.வீரபாபு அவர்கள் சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் சார்பில் எழுதி,இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து,நடித்துள்ள படம் தான் 'முடக்கறுத்தான்'. இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் Dr.K.வீரபாபு,மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் Dr.K.வீரபாபு, தமிழருவி மணியன், இயக்குனர் தங்கர் பச்சான், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் திரைப்படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.   சுரேஷ் காமாட்சி பேசியதாவது, Dr.K.வீரபாபு அவர்கள் எழுதி,இயக்கி,தயாரித்து நடிக்க போவதாக கூறியதை கேட்டு அவரது தன்னம்பிக்கையை பாராட்டியதாகவும்,அவரது சமூகத்தின் மீதான அக்கறை…
Read More
தங்கரின் அழகி-க்கு வயது 20

தங்கரின் அழகி-க்கு வயது 20

அழகி! தமிழில் ஏகப்பட்ட நபர்களை பாதித்த திரைப்படம். அந்த படத்தின் மூலம் காண்போர் ஒவ்வொருவரையும் நமது சொந்த ஊரின் நினைவுகளோடு ஒட்டி உறவாட வைத்தார் தங்கர்பச்சான். உணமையைச் சொல்லப் போனால் இன்றும் கூட எத்தனை தனம்....சண்முகம்..நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?. அதனாலேயே அப்படத்தை பார்த்த அத்தனை பேருக்கும் நூற்றில் தொண்ணூறு பேருக்கு தன் முதல் காதலை நினைவுபடுத்தியது அதிலும் காதல், நட்பு, பிரிவு, பொறாமை, சந்தேகம், பரிதவிப்பு, பாசம், மனிதாபிமானம், குழந்தைத்தனம், விட்டுக்கொடுத்தல், போன்ற எல்லா குணாதிசியங்களையும் ஒருங்கே காட்ட எப்படி முடிந்தது இந்த தங்கர்பச்சானால்? "என இந்த ஒற்றை படத்தை கண்டுவிட்டு வியந்தனர் ரசிகர்கள். சிம்பிளாக சொல்வதானால் மயிலிறகை கொண்டு கைகளில் வருடுவது போன்ற மென்மையான கதை. அறியாப் பருவத்தில் தெரியாமலே நம் மனதுக்குள் குடிகொண்டுவிடுகிற காதலும் காலாகாலத்துக்கும் அது பண்ணுகிற அவஸ்தை களும்தான் இந்த 'அழகி'யின் ஒன்லைன். பொதுவாக பெண்கள்தான் திரையில் துக்கமான காட்சிகள் வந்தால் உடனே…
Read More
error: Content is protected !!