நடிகை குஷ்புவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது! coccyx bone பிரச்சனையால் அவதிப்படுகிறார்!

நடிகை குஷ்புவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது! coccyx bone பிரச்சனையால் அவதிப்படுகிறார்!

நடிகை குஷ்புவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். coccyx bone பிரச்னையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “மருத்துவர்களின் முறையான சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமாகும் என நான் நம்புகிறேன்” என பதிவிட்டு உள்ளார். அத்துடன் கையில் ட்ரீப்ஸ் ஏற்றியபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், coccyx bone பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் சிகிச்சை பெற்ற நிலையில் மீண்டும் அதே பிரச்னைக்காக இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More