சினிமாவில் ஒரு சிற்றரசர் என்று வர்ணிக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர் சுந்தரம்!

சினிமாவில் ஒரு சிற்றரசர் என்று வர்ணிக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர் சுந்தரம்!

கல்கத்தாவிலும், பம்பாயிலும் கோலாப்பூரிலும் மட்டும் இயங்கி வந்த இந்திய சினிமாவை சேலம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைச்சவர் இந்த ‘செல்லுல்லாய்ட் சீமான்’. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 150 படங்களைத் தயாரிச்சவர். 55 படங்கள் இயக்கியவர். 40 ஆண்டுகள் இடைவிடாமல் இயங்கிச் சாதனை படைத்த அவர்தான், மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பிய டி.ஆர். சுந்தரம். “முதலாளி” அப்படீன்னு முன்னணி நட்சத்திரங்களாலும் ஸ்டூடியோ தொழிலாளர்களாலும் நிஜ அன்போடும் அழைக்கப்பட்ட சுந்தரத்தின் சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘திரைப்படத் தயாரிப்பு முறை என்றாலே ஹாலிவுட்டுக்கு இணையாக யாருமில்லை’ என அங்கலாய்ப்பவய்ங்க நாற்பதுகளில் வாழ்ந்திருந்தால் அப்படிக் கேட்க வாய்ப்பே இல்லை. ஹாலிவுட்டுக்குச் சற்றும் குறையாத முழுமையான கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு பிரம்மாண்ட ஸ்டூடியோவை இயற்கை எழில் சூழ்ந்த சேலம் – ஏற்காடு மலையடிவாரத்தில் அமைச்சாரிவர். அங்கே ஷூட்டிங் ஃப்ளோர் , பாடல் ஒலிப்பதிவுக்கூடம்,…
Read More