சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பட ஷூட்டிங் ஜரூர்!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பட ஷூட்டிங் ஜரூர்!

தமிழ்த் திரையுலகிற்கு நம்பிக்கையளிக்கும் வகையில் படங்களைத் தயாரித்து வருகிறது மாதவ் மீடியா நிறுவனம். 'ஜீரோ' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ மணப்பெண்ணே' மற்றும் சசி - ஹரிஷ் கல்யாண் இணையும் படம் ஆகியவை ஆகும். தற்போது தங்களுடைய தயாரிப்பில் ஐந்தாவதாக உருவாகும் பிரம்மாண்ட தயாரிப்பை அறிவிக்கிறது. முன்னணி நடிகரான சிம்பு நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜன ரஞ்சகமான படமாக இது உருவாகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட சிம்பு, இந்தப் படத்துக்காக உடல் இழைத்து முழுமையாக தன்னை அர்ப்பணித்து தயாராகி யுள்ளார். அவருக்கு பொருந்தும் வகையில் இந்தக் கதையை செதுக்கியுள்ளார் சுசீந்திரன். இதில் பாரதிராஜா, நிதி அகர்வால் ஆகியோர் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.…
Read More
சுசீந்தரன் இயக்கி வரும் படத்தின் டைட்டில் ‘ நெஞ்சில் துணிவிருந்தால்’

சுசீந்தரன் இயக்கி வரும் படத்தின் டைட்டில் ‘ நெஞ்சில் துணிவிருந்தால்’

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அறம் செய்து பழகு' படத்தின் தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்று மாற்றப்பட்டுள்ளது. 'மாவீரன் கிட்டு' படத்தைத் தொடர்ந்து 'அறம் செய்து பழகு' என பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வந்தார் சுசீந்திரன். இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. தற்போது 'அறம் செய்து பழகு' என்ற தலைப்பை 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றியுள்ளது படக்குழு. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சுசீந்திரனின் தந்தை நல்லுசாமி வெளியிட்டார். இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் '20 ரூபாய் மருத்துவர்' என்று அழைக்கப்படும் கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்த பால சுப்பிரமணியத்தின் குடும்பத்தினரை கெளரவித்தது படக்குழு. கடந்தாண்டு பால சுப்பிரமணியம் மறைவைத் தொடர்ந்து அவருக்கு 'ஏழைகளின் தெய்வம் எங்கள் ஐயாவுக்கு இதய அஞ்சலி' என்று கோவை மக்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டியது குறிப்பிடத்தக்கது. அவருடைய மகள், மருமகன்,…
Read More