என்னுடைய கரியரில் நான் செய்யாத கதாபாத்திரம் இது! ‘கொட்டேஷன் கேங்’ விழாவில் பிரியாமணி!

என்னுடைய கரியரில் நான் செய்யாத கதாபாத்திரம் இது! ‘கொட்டேஷன் கேங்’ விழாவில் பிரியாமணி!

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் , நடிகை ப்ரியாமணி பேசியதாவது, "இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. இவர் என்னிடம் சொன்ன முதல் கதை சில காரணங்களால் டேக் ஆஃப் ஆகவில்லை. இரண்டாவது சொன்ன இந்த கதை பிடித்துவிட்டது. என்னுடைய கரியரில் காண்ட்ராக்ட் கில்லர் ரோல் இதுவரை செய்ததில்லை. இயக்குநர் விவேக்கின் சகுந்தலா கதாபாத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றினார்கள். எனக்கும் அக்‌ஷயாவுக்கும்தான் நிறைய காம்பினேஷன் காட்சிகள். அக்‌ஷயா சிறப்பாக செய்திருக்கிறார். சன்னி பற்றி வேறொரு இமேஜ் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அவருடைய பத்மா கதாபாத்திரம் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். ஜாக்கி ஷெராப் சாரும் எங்களுக்கு சப்போர்ட்டாக…
Read More
கேன்ஸ் விழாவில் தனக்கு நிகழ்ந்த மிரட்டல்களை பற்றி சன்னி லியோன் பேசியுள்ளார்

கேன்ஸ் விழாவில் தனக்கு நிகழ்ந்த மிரட்டல்களை பற்றி சன்னி லியோன் பேசியுள்ளார்

உலகம் முழுவதும் புகழ்பெற்ற கேன்ஸ் விழாவில் ஆவணப்படங்கள், திரைப்படங்கள் போன்றவை திரையிடப்படுகின்றன. அந்தவகையில் அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’, ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’, மணிப்பூரில் 1990-ல் வெளியான ‘இஷானோ’ ஆகிய மூன்று இந்தியப் படங்கள் திரையிடப்படுகின்றன. அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படத்தில் சன்னி லியோன் நடித்திருப்பதால் அவரும் இவ்விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தனது சினிமா வாழ்க்கை குறித்து சன்னி லியோன் பேசியிருக்கிறார். ``ஆரம்பத்தில் நான் ப்ளூ ஃபிலிம்களில் நடித்து வந்தேன். அதன்பின் திரையுலகிற்கு நடிக்க வந்தேன். அப்போது நான் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை கலந்துகொள்ள அழைத்தார்கள். ஆனால் நான் இந்தியாவிற்கு வர மறுத்து விட்டேன். என்னுடைய கணவர் டேனியல்தான் என்னை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். என்னை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்ததும் அவர்தான். அந்நிகழ்ச்சியின் மூலம்தான் என் மீது இருந்த தவறான பார்வை நீங்கியது. என்னையும் ஒரு நடிகையாக அனைவரும்…
Read More
“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ்நடிப்பில், இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG). விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக அரங்கேறியது. இசை, நடன கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்ற இவ்விழாவினில்..   RK சுரேஷ் கூறியதாவது... சன்னி லியோன் மனிதநேயமிக்க நபர். இந்த படம் பற்றி சதீஷ் என்னிடம் கூறியபோது, ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சமும் இந்த படத்தில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. டார்க் காமெடி திரைப்படங்கள் இப்போது அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் ஹாரர் உடன் கலந்த டார்க் காமெடி திரைப்படம். படம் நன்றாக வந்துள்ளது. ஒரு புதிய தயாரிப்பாளர் நமது திரைத்துறைக்கு…
Read More
சன்னி லியோன் ஏமாந்த கதை !

சன்னி லியோன் ஏமாந்த கதை !

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சன்னி லியோன் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகியுள்ளார். இவரின் பான் கார்ட் எண்ணை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ஆன்லைனில் பிரபல நிறுவனத்திடம் ரூ. 2000 கடன் வாங்கியுள்ளார். இத்தகவலை தனது சமூக வலைதள பதிவின் மூலம் பகிர்ந்துள்ள சன்னி லியோன், ”சில முட்டாள்கள் என் பான் கார்டு எண்ணை பயன்படுத்தி ரூ. 2000 கடன் பெற்றுள்ளனர். இதனால் எனது சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து எனக்கு எந்த உதவியும் ஏன் வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.   இதையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த ட்வீட்டை வைரல் செய்த நிலையில், சன்னி லியோன் அந்த பதிவை நீக்கியதோடு, இந்த பிரச்சனை தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தனது சோஷியக் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் , இந்த பிரச்சனையை விரைவாக சரி செய்ததற்கும், இனி நடக்காது என உறுதி அளித்ததற்கும்…
Read More