‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ஹரோம் ஹரா’

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ஹரோம் ஹரா’

  'செஹரி' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹரோம் ஹரா'. இதில் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலகட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதனை ஜி. ரமேஷ்குமார் வழங்குகிறார். இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது, 'அக்டோபர் 31ஆம் தேதி அன்று மாஸான சம்பவம் ஒன்று இருக்கிறது' என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தற்போது பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு - ஞானசாகர் துவாரகா- சுமந்த் ஜி நாயுடு ஆகியோர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு '…
Read More