ரசிக்கும்படியான படம் ‘கபடதாரி’ – விமர்சனம்!

ரசிக்கும்படியான படம் ‘கபடதாரி’ – விமர்சனம்!

ஹைடெக்-காகிப் போன இந்த 21`ஆம் நூற்றாண்டில் கண்ணில் படும் எழுத்துக்களை எல்லாம் சொல்லாக கூறி விடும் டெக்னாலஜி எல்லாம் வந்து விட்டது. ஆனாலும் கூட பொழுதுப் போக்கு சாதனமான சினிமாக்களுக்கு கதை பிடிப்பதும் அதை சுவைபட வடிவமைக்கும் திரைக் கதையாக்குவதிலும் பலருக்கு கொஞ்சம் கூட  ஆர்வமில்லை. அதனால்தானோ என்னவோ நம் கோலிவுட்டில் பலரும் தங்கள் பட டைட்டில் தொடங்கி கதை வசனம் உள்ளிட்ட எதற்கும் மெனக்கெடாமல் விட்டேத்தியாக முன்னொரு கால ஹிட் தலைப்பு தொடங்கி எதையோ வழங்கி  இதுதான் சினிமா என்ற பெயரில் காட்சிப்படுத்தி நமக்கான காலத்தைக் கபளிகரம் செய்வார்கள்.. இந்த உபாதையில்  சிக்கித் தவிக்கும் கோடம்பாக்க ரசிகனை திருப்திப்படுத்த வென்றே கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக யோசித்து பலரும் ரசிக்கும்படி ‘கபடதாரி’ என்றொரு படத்தை வழங்கி இருக்கிறார்கள். கன்னடத்தில் ரிலீஸாகி ஹிட் அடித்த ‘கவலுதாரி’என்ற க்ரைம் த்ரில்லர் கதையைத்தான் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார்கள். அதாவது துப்பறியும் போலீசாக வாழ ஆசைப்படும் சிபிராஜ் ட்ராபிக்…
Read More
தைப் பூச பண்டிகை திருநாளில் ரிலீஸாகும் ‘கபடதாரி’!

தைப் பூச பண்டிகை திருநாளில் ரிலீஸாகும் ‘கபடதாரி’!

கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலிதா தனஞ்செயன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கபடதாரி’. இந்தப் படத்தில் சிபிராஜ் நாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர், நடிகைகளும் படத்தில் நடிக்கிறார்கள். கலை இயக்குநராக விதேஷ் பணியாற்ற, சில்வா சண்டை காட்சிகளை அமைக்க, பிரவீன் கே.எல். படத் தொகுப்பு பணியைச் செய்கிறார். சைமன் கே.கிங் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து மற்றும் கு.கார்த்திக் எழுதுகிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். வணிகத்தை எஸ்.சரவணன் தலைமையேற்க, நிர்வாக தயாரிப்பு என்.சுப்பிரமணியன் கவனிக்கிறார்.படத்தின் கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், Dr.கோ. தனஞ்செயனும் ஏற்கிறார்கள். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி படத்தை இயக்கியிருக்கிறார். பொதுவாக ரீமேக் படங்கள் மீது பலத்த எதிர்பார்ப்பும், பல நேரங்களில் முதல் படத்துடன் பெரும் ஒப்பிடலும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால்…
Read More
‘கட்டப்பாவ காணோம்’  எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம்” – ஐஸ்வர்யா ராஜேஷ்

‘கட்டப்பாவ காணோம்’ எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம்” – ஐஸ்வர்யா ராஜேஷ்

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படத்தை வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று 'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. 'கட்டப்பாவ காணோம்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது தான் எனக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே இந்த படத்தை நான் மிகவும் அதிர்ஷ்டமான திரைப்படமாக கருதுகின்றேன். சிபிராஜ் மற்றும் இயக்குநர் மணி சேயோன் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்து இருக்கின்றது. இதுவரை நான் நடித்த…
Read More
பேயுடனும், நாயுடனும் ரொமான்ஸ் செஞ்சவன் ஐஸ்வர்யாவுடன் ரொமான்ஸ்! – சிபி மகிழ்ச்சி

பேயுடனும், நாயுடனும் ரொமான்ஸ் செஞ்சவன் ஐஸ்வர்யாவுடன் ரொமான்ஸ்! – சிபி மகிழ்ச்சி

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும்  'கட்டப்பாவ காணோம்'. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி,  'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று  வெளியாகின்றது. இந்த படத்தை 'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. சாந்தினி  தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, திருமுருகன், ஜெயக்குமார், லிவிங்ஸ்டன், சித்ரா லக்ஷ்மன், 'டாடி' சரவணன், பேபி மோனிக்கா மற்றும் சேது ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கட்டப்பாவ காணோம்' படத்தில், ஒளிப்பதிவாளராக ஆனந்த் ஜீவா, இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, கலை இயக்குநராக எம் லக்ஷ்மி தேவ், பாடலாசிரியர்களாக…
Read More