25
Dec
2023-ம் ஆண்டு மிகவும் கொண்டாடப்பட்ட நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான். அவர் நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. அந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இந்த நிலையில், அவர் நடிப்பில் இந்த ஆண்டு மூன்றாவது படமாக டங்கி இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. டங்கி திரைப்படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் உடன் டாப்ஸி, விக்கி கவுஷல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனு ரன்தாவா (டாப்ஸி) அங்கிருந்து தப்பிக்கிறார். 25 வருடங்களாக லண்டனில் இருக்கும் அவருக்கு, நண்பர்கள் புக்கு லகன்பால் (விக்ரம் கோச்சார்), பாலி கக்கார் (அனில் குரோவர்) ஆகியோருடன் இந்தியா திரும்ப வேண்டும் என்று ஆசை. ஆனால் அவர்களுக்கு பிரிட்டிஷ் தூதரகம் விசா வழங்காது.…
