நான் ஷாலினியின் தீவிர ரசிகன்! – விவேக் ஓபராய் ஓப்பன் டாக்!

நான் ஷாலினியின் தீவிர ரசிகன்! – விவேக் ஓபராய் ஓப்பன் டாக்!

அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கும் ’விவேகம்;  படத்துக்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷியா போன்ற பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், ஹாலிவுட் தரத்திலிருக்கும் என படத்தின் இயக்குநர் சிவா கூறியிருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. பரபரப்பான சேஸிங், அதிரடி ஆக்‌ஷன் என எல்லா வகையிலும் ரசிகர்களைக் கவரும்படியாகப் படம் தயாராகியிருக்கிறது எனச் சொல்கிறது படக்குழு. யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் 'விவேகம்' ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனிடையே தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவரும் சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது தமிழ் மக்களுக்கு ஓடோடி வந்து ஆதரவு கரம் நீட்டியவருமான விவேக் ஓபராயை தெரியாதவர் யாருமிருக்க முடியாது. அப்பேர்பட்டவர் நம் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அறிமுகத்துக்காக காத்திருந்த நேரத்தில் அவரின் ஃபேவரைட் ஹீரோ அஜித் படத்தில்…
Read More