04
May
இயக்கம் - அபிஷன் ஜீவிந்த் நடிகர்கள் - சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் ஷங்கர் , கமலேஷ் இசை - ஷான் ரோல்டன் தயாரிப்பு - மில்லியன் டாலர் ஸ்டுடியோ - பசிலியன் நசீரத், மகேஷ் ராஜ் பசீலன் சமீபத்தில் வந்த டீசர்களிலேயே அதிக பரபரப்பை கிளப்பியது இந்தப்பட டீசர் தான். அத்தனை எமோசன் நகைச்சுவை என எல்லாம் கலந்து அசத்தியிருந்தார்கள் ஆனால் இந்தப்படத்திலும் பிரச்சனை இருக்கிறது. ஆனால் அது அவ்வளவு முக்கியமில்லை. டீசர் டிரெய்லர் பார்த்து நிறைய எதிர்பார்த்திருந்தீர்கள் என்றால் முதலில் அதை மறந்து விடுங்கள். அந்தளவு படமில்லை… ஆனால் அதற்காக மோசமுமில்லை.. பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையில் மிகவும் வறுமையில் வாடி வரும் சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரம் வழியாக திருட்டுத்தனமாக தப்பித்து தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகின்றனர். ஆரம்பத்திலேயே அவர்கள் போலீஸ் ஒருவரிடம் மாட்டிக் கொள்கின்றனர். ஆனால், அந்த குடும்பத்தின் இயல்பை பார்த்த அந்த காவல் அதிகாரி அவர்களை தப்பித்துப் போக…