நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் இன்று இந்து முறைப்படி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 150 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று இந்து முறைப்படியும், நாளை கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு சுமார் ரூ.10 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண விழாவைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர். இதையடுத்து, இரு குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு…