தோனியின் அடுத்த படத்தை பற்றி எல் ஜி எம் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார் ஷாக்ஷி தோனி!

தோனியின் அடுத்த படத்தை பற்றி எல் ஜி எம் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார் ஷாக்ஷி தோனி!

    தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'எல் ஜி எம்' திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் தோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் வழங்குகிறது. தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது.   இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நெக்ஸஸ் மால் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது சாக்ஷி சிங் தோனி, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா,…
Read More
தோனியின் முதல் தமிழ் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது

தோனியின் முதல் தமிழ் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது

  தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தோனி மனைவி சாக்‌ஷியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் L.G.M. இது, முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டுள்ளது. எல்.ஜி.எம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களை மகிழ்விக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது,இந்த செகண்ட் லுக் நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. செகண்ட் லுக் போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் ஒரு பேருந்தின் நடுவில் அமர்ந்திருக்க பிரதான பாத்திரங்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இப்படம் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என்பதாலேயே இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண்,…
Read More