‘ஜெயிலர்2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கும் தெரியாது! வசந்த் ரவி

‘ஜெயிலர்2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கும் தெரியாது! வசந்த் ரவி

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. வசந்த் ரவியின் பிறந்தநாளிற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார் அந்த  நிகழ்வில் ”என்னுடைய பிறந்தநாள் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி வருகிறது. என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகதான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன்…
Read More
ராக்கி – இரத்த தெறிக்கும் வன்முறையில், வாழ்வின் தேடல் !

ராக்கி – இரத்த தெறிக்கும் வன்முறையில், வாழ்வின் தேடல் !

  ஒரு சிறப்பான திரை அனுபவத்தை தரும் சினிமாவின் வரவு இந்திய சினிமாக்களில் மிகவும் குறைவாக உள்ளது. தியேட்டர் அனுபவத்தையும், படத்தினுள் சென்று வெளியே வந்த முழுமையான அனுபவத்தையும் தரும் படமாக ராக்கி அமைந்துள்ளது. தன் குடும்பத்தை கொலை செய்த, தன் முதலாளி கும்பலை பழிவாங்க முயலும் நாயகன். தன் வாழ்வின் இறுதிபிடிப்பாக மிஞ்சியிருக்கும் தன் அக்கா மகளை காப்பாற்ற முயல்வதே கதை. 80 ஆண்டுகால தமிழ் சினிமாவில் நாம் பலமுறை பார்த்த கதை தானே என எண்ணினால், நமது கணிப்பு தவறாகும் படி உருவாக்கபட்டிருக்கிறது, திரைக்கதையும், படத்தின் உருவாக்கமும். கதைக்கு ஏற்றார் போல், சினிமாவின் விதம் மாற வேண்டும் என்ற கூரிய சிந்தனையை, நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். உலக சினிமாக்களையும், புதிய அனுபவங்களை அள்ளி வீசும் மேல் நாட்டு சினிமாக்களையும் அருகில் வைத்து ஒப்பிடும் படியான படமாக உருவாகி இருக்கிறது ராக்கி. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் தனக்கே…
Read More