28
Dec
தம்பி ராமையா கதை, வசனம் எழுதி இசையமைக்க அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் 'ராஜாகிளி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வாரம் வெளியாகியிருக்கும் இந்தப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? சமூகத்தில் உழைப்பால் உயர்ந்தவர்கள், சிறு சபலத்தால் எத்தனை கீழே போய் விடுகிறார்கள், உலகம் அவர்கள் வீழ்ச்சியை எப்படி ரசிக்கிறது என்பதை சொல்லி, வாழ்வின் ஒழுக்கத்தின் அவசியத்தை பேசியிருக்கும் படம் தான் ராஜாகிளி. தமிழகத்தில் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல தொழிலதிபரின் கொலை வழக்கை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த உண்மை சம்பவத்தை அப்படியே எடுக்காமல் படத்திற்கான மசாலா சேர்த்து சுவாரஸ்யமான திரைக்கதை ஆக்கியதில், தம்பி ராமையா ஜெயித்து விட்டார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துக் கொள்ளும் ஆஸ்ரமம் நடத்தும் சமுத்திரகனி, ரோட்டில் பிச்சைக்காரனாக மனநலம் குன்றி, அலையும் தம்பி ராமையாவை அழைத்து வருகிறார். தம்பி ராமையா ஒரு காலத்தில்…