28                                    
                                    
                                        Oct                                    
                                
                            
                        
                        
                    
                        சென்னையில் நவம்பர் 1மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் PROVOKE LIFESTYLE வழங்கும் PROVOKE ART FESTIVAL - 2025 மூன்றாவது ஆண்டாக நடைபெறவுள்ளது. இந்த சீசனில் சென்னை தனது கலாசார இதயத்துடிப்பை மேலும் உற்சாகமாக்கவுள்ளது. PROVOKE ART FESTIVAL 2023-ல் துவங்கியதில் இருந்து, பாரதநாட்டியத்தின் உணர்வுமிக்க ஆழத்தையும், கர்நாடக இசையின் காலத்தை வெல்லும் சுவையையும், இந்தியக் கலைகளின் நீங்காத மரபையும் கொண்டாடி வருகிறது. இது இந்தியாவின் வளமான கலை செழுமைக்கு செலுத்தும் மரியாதையாக சமர்ப்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில் புதுமையான அணுகுமுறைகளையும் அங்கீகரிக்கிறது..இரு நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் பிரபல கலைஞர்களின் மெய்மறக்கும் நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன: முதல் நாள் (நவம்பர் 1) ருக்மிணி விஜய்குமார் சுபஸ்ரீ தனிகாசலம் ஹரிச்சரன், சாய் விக்னேஷ், திஷா பிரகாஷ் மற்றும் பலர். இரண்டாம் நாள் (நவம்பர் 2) ரோஹினி மற்றும் பிரலயன் மற்றும் பிறர் ராஜேஷ் வைத்யா, ரஹுல் வெல்லால்,…                    
                                            
                                    