21
Jun
ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியதாவது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது Short Content-க்கான ஒரு தளம். இதன் மூலம் திறமையான பல இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தோம். ’பானிபூரி’ அதன் தொடக்கமாக இருக்கும். இது முழுக்க முழுக்க பாலாஜியின் ரெசிப்பிதான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஆதரவு கொடுங்கள்” என்றார். நடிகர் வினோத் பேசியதாதவது, ”பாலாஜியுடனான நட்பு எனக்கு மிர்ச்சியில் இருந்து ஆரம்பித்தது. இந்தப் படத்திற்கு பிறகு நிச்சயம் நல்ல விஷயங்கள் அவனுக்கு காத்திருக்கிறது. ‘பானிபூரி’ அதற்கு தொடக்கமாக அமையும். அனைவருடனும் வேலை பார்த்ததில் மகிழ்ச்சி”. இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசியதாவது, “இருபது வருடங்களாக நானும் ரேடியோவில் இயங்கி வருகிறேன். அங்கிருந்து இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் நான் செய்த காரியங்கள் எல்லாவற்றையும்…