ரசிகர்களின் இதயங்களை திருடிய ‘முஃபாசா: தி லயன் கிங்’  !!

ரசிகர்களின் இதயங்களை திருடிய ‘முஃபாசா: தி லயன் கிங்’ !!

கிறிஸ்துமஸ் 2024 பண்டிகைக்கு குடும்பங்களை மகிழ்விக்கும் விதமாக முஃபாஸாவுக்காக ஷாருக்கான், மகேஷ் பாபு மற்றும் அர்ஜுன் தாஸ் குரல்களில் 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை திருடி பாக்ஸ் ஆபிஸில் ஆட்சி செய்கிறது! தமிழில் 'முஃபாஸா: தி லயன் கிங்' படத்திற்காக அர்ஜுன் தாஸின் தனித்துவமான குரல், பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. அவரது குரல் முஃபாசா கதாபாத்திரத்தை மறக்கமுடியாததாகவும் பார்வையாளர்களுக்கு இன்னும் நெருக்கமானதாகவும் மாற்றியுள்ளது. ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபு முறையே இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளில் தங்கள் குரல் மூலம் பலம் சேர்த்தாலும் அர்ஜுன் தாஸின் குரல் தனித்து தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அர்ஜுன் தாஸின் ஆழமான மற்றும் கட்டளையிடும் குரல் நடிப்பு முஃபாசா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகவும் அதனை வேறொரு தளத்திற்கும் கொண்டு சென்றுள்ளது. கிறிஸ்மஸ் நெருங்கும் இந்த வேளையில், 'முஃபாசா: தி லயன் கிங்' பிவிஆர் ஐநாக்ஸ், சினிபாலிஸ் போன்ற…
Read More
விலங்குகளுக்கு நான் டப்பிங் பேசுவது இதுதான் முதல்முறை – அசோக்செல்வன் !!

விலங்குகளுக்கு நான் டப்பிங் பேசுவது இதுதான் முதல்முறை – அசோக்செல்வன் !!

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'தி லயன் கிங்' வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. நடிகர் நாசர், “நடிகனாகவும் டப்பிங் கலைஞராகவும் பல படங்கள் பணிபுரிந்து விட்டேன். சிவாஜி சார், அமிதாப் பச்சன் சார், ராஜா அண்ணன் இவர்கள் குரல் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதில் சிவாஜி சார் குரல் எனக்கு ஆதர்சம். உங்களுக்கு எத்தனை வயதானாலும் உங்களுக்குள் ஒரு குழந்தை எப்போதும் இருக்கும். அதனால், இது குழந்தைகளுக்கான படம்…
Read More
முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் முஃபாசாவாக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு !!

முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் முஃபாசாவாக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு !!

டிஸ்னியின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பிரத்யேகமான புதிய போஸ்டரில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முஃபாசாவாக கர்ஜிக்கிறார். டிஸ்னியின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பிரம்மாண்ட ஊடக நிகழ்வில் நம்ரதா ஷிரோத்கர் கட்டமனேனி சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிரத்யேகமான புதிய போஸ்டரை வெளியிட்டார். டைமனுக்கு அலி மற்றும் டாக்காவுக்கு சத்யதேவ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். டிஸ்னியின் முஃபாசா: தி லயன் கிங் டிசம்பர் 20 ஆம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. இதில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முஃபாசாவாகவும், பிரம்மானந்தம் பும்பாவாகவும், டைமோனாக அலியும், சத்யதேவ் டாக்காவாகவும், அய்யப்பா பி ஷர்மா கீரோஸாகவும் குரல் கொடுத்துள்ளனர்.
Read More
‘முஃபாசா’ தி லயன் கிங்’ திரைப்படத்தின் தமிழ் வெர்சனில் அர்ஜுன் தாஸ் !!

‘முஃபாசா’ தி லயன் கிங்’ திரைப்படத்தின் தமிழ் வெர்சனில் அர்ஜுன் தாஸ் !!

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் திரைப்படத்திற்காக தமிழ் சினிமாத் துறையின் முன்னணி நாயகர்களான அசோக் செல்வன், ரோபோ சங்கர், சிங்கம் புலி, வி.டி.வி கணேஷ் மற்றும்M. நாசர் ஆகியோருடன் இணைந்து அர்ஜுன் தாஸும் குரல் கொடுத்திருக்கிறார்! ~ இயக்குனர் பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள முஃபாசா: தி லயன் கிங் இந்தியாவில் 2024 டிசம்பர் 20ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது ~ Chennai, 20th November 2024: காடுகளின் இறுதி ராஜாவான முஃபாசா: தி லயன் கிங், இப்போது தமிழ்த் திரைப்படத் துறையின் மிகவும் பிரபலமான சில குரல்களுடன் தமிழ் மொழியிலும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளதை ஆராய்வதற்கான நேரம் இது! 2019ஆம் ஆண்டின் லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமான 'தி லயன் கிங்' பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, பிரமிக்க வைக்கும் லைவ்-ஆக்சன் முஃபாசா: தி லயன் கிங் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக வந்துள்ளது. ஏனென்றால், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட…
Read More