மெய்யழகன் நாஸ்டாலஜியாவை தூண்டும் அழகான சினிமா!!

மெய்யழகன் நாஸ்டாலஜியாவை தூண்டும் அழகான சினிமா!!

  96 படம் மூலம் மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த, இயக்குநர் பிரேம் இயக்கியிருக்கும் திரைப்படம் மெய்யழகன். முன்னதாக இந்தப்படத்தை ஒரு நாவலாக எழுதி வைத்திருந்தவர் நண்பர்களின் வற்புறுத்தலால் சினிமாவாக்கியிருக்கிறார். ஆனால் அதிலும் ஆச்சரியங்கள் தந்திருக்கிறார். மனம் தடுமாறும் ஒரு நாளில் ஒரு கடற்கரையில் அமர்ந்து, நம் வாழ்க்கை நினைவுகளை மீண்டும் திரும்பி அசை போடும்போது ஏற்படும் ஒரு உணர்வை இந்தப்படம் தந்துவிடுகிறது. பிரேம் உலகத்தை, மனிதர்களை பார்க்கும் விதம், சம்பவங்களை உள்வாங்கும் விதம் எல்லாம் அழகின் உட்சமாக இருக்கிறது. அதை திரையில் தரும் விதம் வாவ் போட வைக்கிறது. தன் உயிராக நினைத்த வீட்டை விட்டு, ஊரை விட்டு சின்ன வயதிலேயெ வந்தவன், 22 ஆண்டுக்கு பிறகு சொந்தக்கார தங்கை கல்யாணத்திற்கு செல்கிறான். அங்கு தன் மேல் பாசம் கொட்டும் ஒருவனை சந்திக்கிறான். அவனுக்கு அவன் பெயர் கூட தெரியவில்லை, ஆனால் அவன் இவனது மொத்த ஜாதகமும்…
Read More