மாயபிம்பம் ஒரு வித்தியாசமான முயற்சி !!

மாயபிம்பம் ஒரு வித்தியாசமான முயற்சி !!

கே.ஜே. சுரேந்தர் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜானகி, ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார், மணிமேகலை ஆகியோர் நடித்துள்ளனர். நண்பர்கள் நால்வரை மையமாகக் கொண்டு, பெண்களை “ஜட்ஜ்” செய்வது சரியா தவறா என்ற கேள்வியை கதையின் அடிப்படையாக வைத்துக் கொண்டு படம் நகர்கிறது. பெண்களைப் பார்த்த உடனே அவர்களின் மனநிலையை கணித்து விடும் ஒருவன், அதனை ஆச்சரியமும் பொறாமையும் கலந்த பார்வையில் பார்க்கும் மற்ற மூன்று நண்பர்கள் – இந்த உறவுகளுக்குள் நாயகன் சிக்கிக் கொள்வதே கதையின் தொடக்கம். நாயகனின் குடும்ப சூழல் – அன்பான அப்பா, கோபம் கலந்த பாசம் கொண்ட அம்மா, புரிதலான அண்ணன், அண்ணி, சித்தப்பாவை உயிராக நேசிக்கும் அண்ணன் மகள் – அனைத்தும் கதைக்கு ஒரு நெகிழ்ச்சியான பின்னணியை உருவாக்குகிறது. இந்தச் சூழலில் நாயகன் சந்திக்கும் பெண்ணுடன் அவனுக்கு உருவாகும் ஈர்ப்பு, அதை நண்பன் தனது “கணிப்புகள்” மூலம் சந்தேகமாக மாற்றுவது,…
Read More