CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வு !!

CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வு !!

நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், மஹத் ராகவேந்திரா மற்றும் பல முக்கிய அரசியல்வாதிகள் CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வில் கலந்து கொண்டனர்! CTMA (Confederation of Tamil Nadu Malayalee Association) சமீபத்தில் சென்னையில் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் பண்டிகை இது. வயநாடு நிலச்சரிவின் போது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியை நன்கொடையாக வழங்குவதற்காக ஒரு சிறப்பு முயற்சியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எம். மதிவேந்தன் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார். இவர்களுடன் நடிகர்கள் மஹத் ராகவேந்திரா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் கலந்து கொண்டனர். திரு பி.கே. சேகர் பாபு பேசுகையில்,…
Read More
மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’

மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’

ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில் பிரபுராம். செ இயக்கத்தில், நடிகர்கள் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'!*   வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில், இயக்குநர் பிரபுராம். செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'. மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருமே ஒரே திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் நகர்ப்புற பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தக் கதை மேலும் இளமை துள்ளலாக உள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெரியதிரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.   விரைவில் படத்தின் பாடல்களும் வெளியாக இருக்கிறது. மஹத் வடசென்னையைச் சேர்ந்த ஃப்ரீவீலிங் பையனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். வடசென்னை பையனாக மஹத் இந்தப் படத்தில் நடித்திருப்பது இந்தக் கதைக்கு…
Read More