14
Jul
முன்னொரு காலத்தில் சினிமா இசை கூட, மேல்தட்டினருக்குத்தான் என்றிருந்தது. அதைப் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிய ரசிகர்கள் அப்போது இருந்தார்கள். ஆனால், சினிமா என்பது சாமான்யனுக்கானது என்று ஒருகட்டத்தில் உணர்ந்து படங்களை எடுத்தார்கள். அதேபோல, இசையையும் லேசாக்கினார்கள். மனதை லேசாக்கும் இசை, லேசாகவும் எளிமையாகவும் கிடைக்க, அதில் கிறுகிறுத்துப் போனான் ரசிகன். ரசிக மனங்களுக்கும் சினிமா இசைக்கும் ஓர் உறவு அங்கே பூத்தது. அப்படி உறவைப் பூக்கச் செய்தவரையே உறவாய்க் கொள்ளத் தொடங்கினார்கள் மக்கள். அவர்... எம்.எஸ்.வி. என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன். இசைக்கு தலையாட்டலாம். ஆனால் அந்த உணர்வை முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ளமுடியாது என்பதாகவே திரையிசையும் அந்தக் காலத்தில் இருந்தது. எப்பேர்ப்பட்ட பாட்டாக இருந்தாலும் அதில், கர்நாடக சங்கீதத்தின் சாரமும் தாக்கமும் நிறைந்திருக்க, பாட்டைக் கேட்டு ரசித்தார்களே தவிர, அதை ராகம் பிசகாமல் சேர்ந்து பாடமுடியாத நிலைதான் இருந்தது. பிறகு அதை உடைத்து, எல்லோருக்குமான இசையாக மாறியதுதான் தமிழ் சினிமா இசையின் ஆரம்பம்.…