லைகர் (Saala Crossbreed) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

லைகர் (Saala Crossbreed) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து Puri connects நிறுவனம் தயாரிக்க, பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பான் இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள திரைப்படம் லைகர் (Saala Crossbreed). பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் 25 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பை தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் தனது Studio 9 நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். பட வெளியீட்டை ஒட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி அனன்யா பாண்டே, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் ஆகியோர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர் இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் R K சுரேஷ் பேசியதாவது.. விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை அவருக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய இந்த படத்தினை நான் வெளியிடுவது பெரு மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும்.…
Read More
இந்திய அளவில் சாதனைகள் படைத்து வரும்  LIGER ( saala Crossbreed )

இந்திய அளவில் சாதனைகள் படைத்து வரும் LIGER ( saala Crossbreed )

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான  LIGER ( saala Crossbreed )இந்திய அளவில் சாதனைகள் படைத்து வருகிறது ! விஜய் தேவரகொண்டாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட LIGER (Saala Crossbreed) படத்தின் காட்சித்துணுக்கு  (glimpse)  புத்தாண்டு பரிசாக  வெளியாகியுள்ளது. ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் அளவிலான  அட்ரினலின் பம்ப் செய்யும் MMA  சண்டைக் காட்சிகளைப் பற்றிய ஒரு சிறு பார்வையை இந்த வீடியோ வழங்கியுள்ளது, ‘மும்பை தெருக்களின் சேரி நாயகன்... சாய் வாலா... லைகர்..."  அறிமுகத்தை வெளிப் படுத்துவதாக இந்த காட்சித்துணுக்கு அமைந்துள்ளது. தனது ஹீரோக்களை ஸ்டைலான அட்டகாசமான அவதாரங்களில் வழங்குவதில் ராஜாவாக திகழும் திறமைமிகு இயக்குனர் பூரி ஜெகன் நாத், இந்த மிகப்பிரமாண்டமான இந்திய பன்மொழி திரைப்படத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத ஸ்டைலான மற்றும் அதிரடி அவதாரத்த்தில் காட்டியுள்ளார். விஜய் ஒரு மிருகம் போல் கூர்மையான உடலமைப்புடன்,  முற்றிலும்…
Read More
இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசன் !

இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசன் !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான LIGER ( saala Crossbreed )படத்தில் மைக் டைசன் இணைகிறார் ! கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் தேவரகொண்டா அவர்களின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமான “LIGER” படத்தை, ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றுவதில், எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பிரமாண்டமாக உருவாக்கிவருகிறார். மொத்த படக்குழுவிற்கும், ஆக்‌ஷன் ரசிகர்களுக்கும், மற்ற அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் முக்கியமான படமான இந்த படம் இருக்கும்.   அகிலம் அதிரும்படியான ஒரு அட்டகாச தகவலை LIGER படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழு மிகபெருமையுடன் கூறுவது என்னவென்றால், இந்திய திரைப்படங்களில் முதன்முறையாக, உலக அளவில் வரலாறு படைத்த ஒரு நபர், யாராலும் அசைக்கமுடியாத ஜாம்பவான், மைக் டைசன், பெருமைமிக்க பன்மொழி திரைப்படமான LIGER படத்தில் இணைகிறார். ஆம், நீங்கள் இப்பொழுது வாசித்தது சரி தான். மிகவும் ஆக்ரோஷம்…
Read More
விஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…!

விஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…!

படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு ! தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சண்டை கலைஞர்கள் பங்குகொள்ள, படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகள் மற்றும் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு, எதிர்பாராத சிறப்பு விருந்தினர் வந்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நரசிம்மா நந்தமூரி பாலகிருஷ்ணா படப்பிடிப்பை பார்வையிட்டு குழுவினரை வாழ்த்தியுள்ளார். அவர் நடிக்கும் Akhanda படத்தின் படப்பிடிப்பும் கோவாவுக்கு அருகில் தான் நடைபெற்று வருகிறது. படத்திற்கு போடப்பட்டிருந்த பிரமாண்ட செட்டை…
Read More
பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படமான Liger செப்டம்பர் 9 அன்று வெளியாகிறது!.

பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படமான Liger செப்டம்பர் 9 அன்று வெளியாகிறது!.

ப்ளாக்பஸ்டர் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில்,இளம் நாயகன் விஜய் தேவர கொண்டாவுடைய முதல் பன்மொழி திரைப்படமாக உருவாகும் LIGER ( saala Crossbreed ) மிகப் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமாக உருவாகிவருகிறது. Puri connects நிறுவனம் இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து தயாரிக்கிறது. liger படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் இன்று துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வியாழன்று படக்குழுவினர் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை அறிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது. ஆம்.. பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படமான Liger செப்டம்பர் 9 அன்று வெளியாகிறது. இதையொட்டிய அறிவிப்பு போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கையில் ஒரு தடியுடன், மிக வித்தியாசமான தோற்றத்தில் அழுத்தாமான பார்வையுடன் காட்சி தருகிறார். பாக்ஸிங் ரிங்கில் ஒருவருடன் சண்டையிடுகிறார் விஜய் தேவரகொண்டா பின்னணியில் பார்வையாளர்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்று வதோடு, இப்படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ்…
Read More