“ஜில்லா விட்டு ஜில்லா வந்து” டூ “சில்லாஞ்சிறுக்கி” ; பாடலாசிரியர் மோகன் ராஜனின் வெற்றி பயணம்

“ஜில்லா விட்டு ஜில்லா வந்து” டூ “சில்லாஞ்சிறுக்கி” ; பாடலாசிரியர் மோகன் ராஜனின் வெற்றி பயணம்

சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் பல கலைஞர்களின் திறமைகளை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லாஞ்சிறுக்கி பாடல்’ இளைஞர்களின் காதுகளில் ரீங்காரமிடும் ரிங் டோனாக மாறியுள்ளது. ஏற்கனவே பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடலாசிரியர் மோகன் ராஜன் மீது ‘லப்பர் பந்து’ மீண்டும் புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சசிகுமார் இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவான ‘ஈசன்’ படத்தில் மிகவும் புகழ்பெற்ற “ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேட்டியா” என்கிற சூப்பர் ஹிட் பாடலின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பாடலாசிரியர் மோகன் ராஜன். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த யாதுமாகி படத்தின் மூலம் அறிமுகமானாலும் அதற்கடுத்து வெளியான ஈசன் படம் தான் இவருக்கான அடையாளத்தை பெற்று தந்தது. சினிமாவில் நுழைந்த இந்த 15 வருடங்களில் கிட்டத்தட்ட 500 பாடல்களை…
Read More
“லப்பர் பந்து வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்” ; ஹரிஷ் கல்யாண்

“லப்பர் பந்து வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்” ; ஹரிஷ் கல்யாண்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். கிராமத்து கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு அதன் ஊடாக அழகான ஒரு காதல் கதையை இதில் சொல்லி இருந்தார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. இந்த இரண்டும் சேர்ந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட படம் தொடர்பான அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தின் வெற்றி சந்திப்பு நேற்று மாலை சென்னை கிரீன் பார்க்…
Read More
error: Content is protected !!