சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ எப்படி இருக்கிறது ?

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ எப்படி இருக்கிறது ?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு வெளி வந்து இருக்கும் கங்குவா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா ? 1000 வருடத்திற்கு முந்தைய காலம், நிகழ் காலம் என இரண்டு கால கட்டத்தில் நடக்கும் கதை. அறிவியல் ஆராய்ச்சி கூடத்திலிருந்து ஒரு சிறுவன் தப்பிக்கிறான் அவன் கோவாவில் பவுண்டி ஹண்டராக இருக்கும் சூர்யாவை தேடி வருகிறான், அவனுக்கும் சூர்யாவுக்கும் என்ன தொடர்பு எனும் போது ஆயிரம் வருடத்திற்கு முன்னால் கதை விரிகிறது. அந்த காலகட்டத்தில் சூர்யாவுக்கும் அந்த சிறுவனுக்கும் என்ன நடந்தது. அந்த சிறுவனை கொல்ல துரத்துபவர்கள் யார்? நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் அந்த சிறுவனை சூர்யா காப்பாற்றுகிறாரா ? என்பது தான் படம் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டத்தின் உச்சம். படம் விசுவல் டிரீட், கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் வரலாற்று காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. யாரும் தனி நடிகர்களாக…
Read More
தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !

தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !

இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதி நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், திரை ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. “எதற்கும் துணிந்தவன்” படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் சூரியாவை நேரில் தரிசிக்கவுள்ள ரசிகர்களுக்கு, மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது. இப்படத்தில் இதுவரை வெளியான டீசர், டிரெய்லர்களில் இரண்டு விதமான பாத்திரங்களில் சூர்யா தோற்றம் மிரட்டலாக உள்ளது. முழுக்க ஸ்டைலீஷ் மாடர்ன் சூர்யா, போர் வீரனாகவும் கலக்கும் சூர்யா என இரு கதாப்பாத்திரங்களில் தொன்றும் சூர்யா, திரையில் மேலும் பல விதமான கெட்டப்களில் தோன்றவுள்ளார். கதை, பிரம்மாண்டம், விஷுவலாக மட்டுமல்லாது, இது உண்மையில் சூர்யா ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக இருக்கும். இயக்குநர் சிவா அவரது குழுவுடன் இணைந்து, 3…
Read More
’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா !!

’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா !!

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது, “சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தனை பேரை வைத்து எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் படம் எடுத்து முடித்திருப்பது சாதாரண விஷயம் கிடையாது. நான் இதுவரை செய்த படங்களிலேயே குறைவான பதட்டத்துடன் இருந்த படம் இதுதான். சூர்யா சாரின் உழைப்பு நிச்சயம் பேசப்படும். முழுப்படமும் நேற்று இரவுதான் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியோடு இந்த விழாவிற்கு கிளம்பி விட்டேன். படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக வரக் காரணம் சூர்யா சாரின் அன்பான ரசிகர்கள்தான். 10,500- 11,500 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. தீபாவளிக்கு இந்தப்…
Read More