வெளியானது ‘தேவாரா’ படத்தின் மற்றொரு கதாபாத்திரம்! சைஃப் அலிகானின் ‘பைரா’ கதாபாத்திரத்தை வெளியிட்ட ஜூனியர் என்டிஆர்!

வெளியானது ‘தேவாரா’ படத்தின் மற்றொரு கதாபாத்திரம்! சைஃப் அலிகானின் ‘பைரா’ கதாபாத்திரத்தை வெளியிட்ட ஜூனியர் என்டிஆர்!

  மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்றான 'தேவாரா'வில் கதாநாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வரக்கூடிய இப்படத்தில் சைஃப் அலிகான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் பிறந்தநாளை இன்று கொண்டாடும் விதமாக, இப்படத்தின் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் படத்தில் இருந்து சைஃப் அலிகானின் கதாபாத்திரமான 'பைரா'வின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ போஸ்டரில், சைஃப் அமைதியான நீர் மற்றும் மலைகளின் பின்னணியில் நிற்பதைக் காணலாம். இந்த எல்லா விஷயங்களும் நிச்சயம் ‘தேவரா’ ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. படத்தில் இருந்து சைஃப் அலிகானின் தோற்றத்தைப் பகிர்ந்து, ஜூனியர் என்டிஆர் தெரிவித்திருப்பதாவது, ‘’பைரா’ பிறந்தநாள் வாழ்த்துக்கள் சைஃப் சார்!’ என்று கூறியுள்ளார். நந்தமுரி கல்யாண ராம் வழங்க, யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேவரா’. இப்படம் 5 ஏப்ரல் 2024 அன்று…
Read More
பிரபல வில்லன்களுக்கு போட்டியாகும் நடிகை ஐஷ்வர்யா ராய்! தொடர்ந்து வில்லியாக வரும் வாய்ப்புகள்!

பிரபல வில்லன்களுக்கு போட்டியாகும் நடிகை ஐஷ்வர்யா ராய்! தொடர்ந்து வில்லியாக வரும் வாய்ப்புகள்!

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான "இருவர்" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஐஸ்வர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் "பொன்னியின் செல்வன் 2". இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து வந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் "நந்தினி" எனும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆர் ஆர் ஆர் படத்துக்கு பின் ஜூனியர் என்.டி.ஆருக்கு திரைத்துறையில் பெரிய பெயர் கிடைத்துள்ளது. அவருக்கு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வருகின்றன. இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை வில்லியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம்…
Read More
‘தி லிட்டில் மெர்மெய்ட்’ திரைப்படம் மே 26 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

‘தி லிட்டில் மெர்மெய்ட்’ திரைப்படம் மே 26 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

‘தி லிட்டில் மெர்மெய்ட்’ இயக்குநர் ராப் மார்ஷல், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்! மிகச்சிறந்த ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ராப் மார்ஷல் இந்தியப் பத்திரிகை ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய நடிகர்களுடன் பணிபுரிவதில் அவருக்கு உள்ள ஆர்வம் குறித்து கேட்கப்பட்டபோது, ​​அவர் உடனடியாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரைக் குறிக்கும் விதமாக, ‘நாட்டு நாட்டு நடிகர்கள்’ என்று பதிலளித்தார். இதுமட்டுமல்லாது, இரண்டு நடிகர்களும் அற்புதமானவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக அவர்களின் தோற்றம், 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தில் அவர்களின் நடிப்பு மற்றும் அசாதாரண நடன திறன்களைப் பாராட்டினார். இந்திய சினிமா உலக அளவில் வளர்ந்து வருவதற்கும், சர்வதேச பார்வையாளர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கத்துக்கும் இயக்குநர் ராப்…
Read More
வெளியீட்டு தேதியை அறிவித்த ” RRR”  படக்குழு

வெளியீட்டு தேதியை அறிவித்த ” RRR” படக்குழு

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.   இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்ற முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும் போட்டியிட்டார்கள். இறுதியாக, லைகா நிறுவனம் பெரும் விலை கொடுத்து தமிழக உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது.   உலகமெங்கும் ஜனவரி 7-ம் தேதி, 2022-ல் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம்.
Read More