தென்னிந்திய திரையுலகில் கால் பதித்துள்ள ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் !

தென்னிந்திய திரையுலகில் கால் பதித்துள்ள ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் !

  திரையுலகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு சில நடிகைகளில் ஜான்வி கபூரும் ஒருவர்! அவரது அழகும், அசத்தும் நடிப்பும், வெள்ளித்திரையில் மேலும் மேலும் பார்க்க தூண்டும், பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வருடம் அவருக்கு மிகச்சிறப்பான வருடமாக அமைந்திருக்கிறது. ஜான்வி கபூர் நடிப்பில் அடுதடுத்து, 3 மிகப்பெரிய திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று தர்மா புரடக்சனில் ‘சன்னி சங்கரி கி துளசி குமாரி’ எனும் புதிய திரைப்படத்தையும் அறிவித்துள்ளார். வளரும் இளம் நட்சத்திரமாக, இளைஞர்களைக் கொள்ளைகொண்டு வரும் நாயகி ஜான்வி கபூர், தற்போது தென்னிந்தியாவிலும் கால் பதித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகை ஜான்வி கபூர், தான் தென்னிந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் தேவாரா படம் பற்றி கூறியதாவது.., ஒரு மிகப்பெரிய படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இந்த படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்கிறேன். மேலும் இப்போது தெலுங்கு மொழியையும் நான் கற்று வருகிறேன்…
Read More
ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது

ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது

சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும் அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது என பாராட்டுகள் குவிந்து வருகிறது. சவாலான கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையில் நடிப்பதற்கு ஜான்வி கபூர் எப்போதும் தயங்கியதும் கிடையாது, அதுபோன்ற படங்களை அவர் தவிர்த்ததும் கிடையாது. அந்த வகையில் அவர் தற்போது, தன்னுடைய சமீபத்திய படமான ‘மிலி’யில் மீண்டும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். சர்வைவல் ட்ராமாவாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிய ‘மிலி’ கதை பார்வையாளர்களையும் சினிமா ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஜான்வி கபூரின் திறமையான நடிப்புக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து ‘மிலி’ திரைப்படம் இந்தியன் ஓடிடி டொமைனில் முதல் இடத்தையும், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ட்ரெண்டிங் டாப்பிக்காகவும் உள்ளது. ‘குட் லக் ஜெர்ரி’- ஒரு டார்க்…
Read More