25
Sep
பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் இறைவன். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி 'இறைவன்' படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இயக்குநர் அகமது, "நிகழ்விற்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. 'மனிதன்' படத்திற்கு பிறகு ஐந்தாறு வருடங்கள் கழித்து இந்த மேடையில் நிற்கிறேன். ஒரு படம் நடக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளரும் ஹீரோவும் மனது வைக்க வேண்டும். ரவியுடன் இதற்கு முன்பு 'ஜனகனமண' ஆரம்பித்தோம். ஆனால், கோவிட் காரணமாக அது நடக்கவில்லை. ரவியை வைத்து புது ஜானரில் ஒரு படம் எடுக்க நினைத்தேன். அந்த கதையை புரிந்து கொண்ட ரவிக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. அதனால்தான் 'இறைவன்' படமே வந்துள்ளது. இதுவரை நான் சாஃப்ட்டான படங்கள் மட்டுமே…