15
Nov
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த, வரலாற்றுக் காவியப்படம், கிளாடியேட்டர் ரிட்லி ஸ்காட் இயக்கி, ரஸ்ஸல் க்ரோவின் சிறப்பான நடிப்பில்2000 ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுக்க உள்ள திரை ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ரோமானிய பேரரசின் காலகட்டத்தில் மனிதர்களை மிருகங்களாக, அடிமைகளாக பயன்படுத்தி, நடந்த கிளாடியேட்டர் விளையாட்டு போட்டிகளை மையமாக வைத்து வந்த படம் ஆஸ்கர் விருது வரை கலக்கியது. கிளாடியேட்டராகும் வஞ்சிக்கப்பட்ட படைத்தலைவன் மேக்சிமஸ், தனது குடும்பத்தினருக்காகப் ரோமப் பேரரசை பழிவாங்க , முயற்சிப்பது தான் அப்படத்தின் மையக்கரு. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த உடை வடிவமைப்பு, சிறந்த செளண்ட் எஃபெக்ட்ஸ், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஐந்து பிரிவுகளில் 73 ஆவது அகாடெமி விருதுகளை வென்றது. முதல் பாகம் நிகழ்ந்தேறிய 16 வருடங்களுப் பிறகு, இப்படத்தின் கதை துவங்குகிறது. மேக்சிமஸின் மகன் லூசியஸ் வெரஸ் கிளாடியேட்டர் ஆகின்றான். அவனது மனைவியை ரோமப் பேரரசின் படைத்தலைவனான மார்கஸ்…
