நியாயத்தின் பக்கம் நிற்பாளா கார்கி?- கார்கி விமர்சனம்

கார்கி பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட தன் அப்பா நிரபராதி என நிரூபிக்க போராடும் ஆசிரியாய் வேலை செய்யும் ஒரு பெண்ணின் கதை. படத்தின் மிகப்பெரிய பிளஸ் படம் ஆரம்பிக்கும் இடமும், முடியும் இடமும் தான். சிறிது நேரம் கூட தாமதிக்காமல் முதல் பிரேமில் இருந்து கதைக்குள் போக ஆரம்பித்துவிட்டார்கள். எடுத்துகொண்ட கதைக்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்து படத்தை நிமிர செய்துவிட்டார் படத்தின் எழுத்தாளர். லைவ் சவுண்ட், லைவ் லோகேஷன், நிஜத்தில் வாழும் கதாபாத்திரங்கள் என படத்தை நம்முடன் இணைக்க கடினமாக உழைத்து அதில் வெற்றி கண்டு இருக்கிறார்கள் படக்குழு. ஒளிப்பதிவாக இருக்கட்டும், எடிட்டாக இருக்கட்டும், இசையாக இருக்கட்டும் தனியாய் தெரியாமல் கார்கி உலகத்தோடு இணைந்திருக்கிறது. அதுவே திரைப்படத்தை மிகச்சிறப்பாக மாற்றி இருக்கிறது. அடுத்தாக இந்த திரைப்படத்தின் நடிகர்கள் பற்றி கூற வேண்டும். இந்த படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். முதலில் இந்த படத்தில் ஆச்சர்ய…
Read More
சூர்யா, ஜோதிகாவை பார்த்ததும் எனக்கு பேச்சு வரவில்லை – சாய் பல்லவி

சூர்யா, ஜோதிகாவை பார்த்ததும் எனக்கு பேச்சு வரவில்லை – சாய் பல்லவி

  பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் கார்கி. இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குனர் கவுதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்யலட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குனர் கவுதம் ராமசந்திரன் பேசும்போது, என்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படம் நன்றாக இருந்தால் உடனே கூறுங்கள். இல்லையென்றால், சிறிது தாமதமாக கூறுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஆனால், இப்படம் நன்றாக இருக்கிறது என்று தான் கூறுவீர்கள். ஜூலை 15ந் தேதி வெளியாகிறது. பார்த்து விட்டு கூறுங்கள். ஒளிப்பதிவு இப்படத்தில் ஸ்ரீயந்தி மற்றும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். என்னுடைய நண்பர் படத்தொகுப்பு செய்திருக்கிறார். சாய் பல்லவி இப்படத்திற்கு மிகவும்…
Read More
error: Content is protected !!