பரத் & வாணி போஜன் நடிக்கும் புதிய படம்: ஆக்சஸ் ஃபிலிம் தயாரிக்கிறது!

பரத் & வாணி போஜன் நடிக்கும் புதிய படம்: ஆக்சஸ் ஃபிலிம் தயாரிக்கிறது!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும், அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் Axess Film Factory நிறுவனம் தனது அடுத்த படத்தினை துவங்கி யுள்ளது. தற்போதைக்கு Production No 12 என தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் M.சக்திவேல் இயக்குகிறார். சமீபத்தில் இவர் இயக்கியிருந்த அபிமன்யு குறும்படம் திரை உலகில் பெரும் பாராட்டுக்களை குவித்தது. இப்படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கிறார்கள். Axess Film Factory நிறுவன தயாரிப்பாளர் G. டில்லிபாபு படம் குறித்து கூறியது… இயக்குநர் சக்திவேல் இந்த கதையை என்னிடம் கூறிய போது மிகுந்த ஆச்சர்யமடைந்தேன். கதையின் பின்புலமும் கதை நகரும் விதமும் மிகவும் புதிதாக இருந்தது. நகருக்கு வெளியே காற்றாடி விண்ட்மில்லை சுற்றியே மொத்த கதையும் நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் முழுத்திரைக்கதையையும் படித்த பின்னே படத்தை தயாரிக்க சம்மதித்தேன். திரைக் கதையை படித்தபோது பல இடங்களில் மிக அழுத்தமான கதையமைப்பும், மர்மமும் கலந்து இருந்தது.…
Read More