17
Sep
மின்னல் முரளி புகழ் டோவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ARM படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் 4 நாட்களில் 35 கோடி வசூல் செய்துள்ளது. "மின்னல் முரளி" படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த டோவினோ தாமஸ், அஜயந்தே ரண்டம் மோஷனம் (ARM) படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்துள்ளார். இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றது. இந்த ஃபேண்டஸி த்ரில்லர் படம் டோவினோ தாமஸ் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியுள்ளது. ARM படத்தில் டோவினோ தாமஸ் குஞ்சிக்கெழு, மணியன் மற்றும் அஜயன் ஆகிய மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் நடத்தைகளுடன் சித்தரிக்கப்படுகிறது, மேலும் அவரது அழுத்தமான திரை ஈர்ப்பு மற்றும் நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது, குறிப்பாக அவரது உணர்ச்சிகரமான நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ARM படம் பாக்ஸ்…