டான் திரைப்பட விமர்சனம்

டான் திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, RJ விஜய், பால சரவணன், முனீஸ்காந்த், காளி வெங்கட், சிவாங்கி தயாரிப்பு: லைகா புரொடக்‌ஷன், SK புரொடக்‌ஷன் இயக்குனர்: சிபி சக்ரவர்த்தி இசையமைப்பாளர்: அனிருத் ஒளிப்பதிவு: KM பாஸ்கரன் படத்தொகுப்பு: நாகூரான் ராமசந்திரன் கல்லூரியில் யாருக்கும் அடங்காமல் தன் போக்கில் டானாக சுற்றி கொண்டிருக்கும் ஒருவன், தன்னை எப்படி கண்டுணர்ந்தான் என்பதே கதை. படத்தின் மொத்த பலமும் சிவகார்த்திகேயன் தான். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தனது திரை ஆளுமையால் படத்தை கட்டி இழுத்துள்ளார். காமெடி, செண்டிமெண்ட், காதல் என மூன்றும் கலந்து அமைந்த திரைக்கதையில் ஹீரோவுடைய பங்கு மிகவும் முக்கியமானது. இவை அனைத்தையும் தேவையான இடத்தில் தேவையான அளவு வழங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் கமர்சியல் பார்முலா மறைந்து போய், வேறு பக்கம் திசை திரும்பியிருந்த படங்களுக்கு மத்தியில், மீண்டும் ஒரு முழுக்க முழுக்க கமர்சியல் எலமெண்ட்க்குகளை அள்ளி…
Read More
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்

லைகா புரொடக்‌ஷன்ஸ் - சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம் “டான்” இப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. இன்று நடந்த இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாகி திரு.G.K.M.தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் திரு.கலையரசு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி  ராஜா.C ஆகியோர் இருந்தனர். பாடல்கள் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். K.M. பாஸ்கரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு - நாகூரான் கலை…
Read More
Lyca வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” பட படப்பிடிப்பு தொடக்கம்!

Lyca வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” பட படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சிவாகர்த்திகேயன் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகும் “டான்” படத்தின் படப்பிடிப்பு இன்று 2021 பிப்ரவரி 11 கோயம்புத்தூரில் துவங்கியது. படத்தின் அனைத்து நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழுவினர் இதில் பங்கு கொண்டனர். இப்படத்தினை LYCA Productions நிறுவனம் Sivakarthikeyan Productions உடன் இணைந்து இபடத்தினை தயாரிக்கிறது. கல்லூரியை பின்னணி களமாக கொண்டு முழுக்க முழுக்க காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படமாக, இப்படம் உருவாகிறது. நடிகை பிரியங்கா அருள் மோகன் “டாக்டர்” படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இப்படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். நடிகர்கள் SJ சூர்யா, சமுத்திரகனி, விஜய் டீவி புகழ் ஷிவாங்கி, RJ விஜய், முனீஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் மற்றும் பல பிரபல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தினை இயக்க இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். LYCA Productions சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயனின் Sivakarthikeyan Productions உடன்…
Read More
லைகா புரொடக்‌சன்ஸ் வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !

லைகா புரொடக்‌சன்ஸ் வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !

நடிகர் சிவர்கார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள உச்சகட்ட எதிர்பார்ப்பு மிக்க படங்களின் பட்டியலில் மிக மேன்மையான இடத்தை இப்படங்கள் பெற்றிருக்கிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியான அறிவிப்பாக, சிவகார்த்தி கேயனின் 19 வது படமாக “டான்” படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார். லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார். லைகா குழும தலைவர், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா  கூறியது... தமிழின் மிக முக்கிய நடிகர், பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாயகனான, சிவகார்த்கிகேயனுடன் இணைந்தது, மிகப்பெரும் மகிழ்ச்சி. அவரது அடுத்த படங்கள் ( டாக்டர் & அயலான் ) 2021 வருடத்தின் ரசிகர்களின் எதிர்பாப்பில் முதன்மை இடத்தை…
Read More