08
Dec
மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி, S ஜெகநாதன் தயாரிப்பில், இயக்குநர் முத்து வீரா இயக்கத்தில், வெளிவந்திருக்கும் திரைப்படம் ''டப்பாங்குத்து''. தமிழகம் மறந்து விட்ட தெருக்கூத்து கலையை மையமாக வைத்து வந்திருக்கும் படம் தான் இது. தமிழகத்துக்கென பல கலைகள் இருந்தது ஏன் சினிமா பிறந்ததே நாடகக்கலையில் இருந்து தான், ஆனால் அந்த நாடகமே தெருக்கூத்தில் இருந்து தான் பிறந்தது தான். நம் நவீன வாழ்வியல் காலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும், இந்த தெருக்கூத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் ஒரு நல்ல படைப்பாக வந்திருக்கிறது இந்த படைப்பு. மதுரையை சேர்ந்த பாண்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஆட்டக்காரன்.அவன் தன் குழுவினருடன் சேர்ந்து மதுரையை சுற்றி உள்ள ஊர்களுக்குச் சென்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறான். அவனுடைய தாய் மாமன் தர்மலிங்கம், கலை நிகழ்ச்சிகளுக்கு நாடக நடிகர்களை புக் பண்ணி கொடுக்கும் ஒரு புரோக்கராக இருக்கிறார். அதே ஊரை சேர்ந்த தனம் பாண்டியோட…