கனவுகளின் காட்சி பதிவாளர் அசோக் குமார் நினைவு தினமின்று!

கனவுகளின் காட்சி பதிவாளர் அசோக் குமார் நினைவு தினமின்று!

ஒரு டைரக்டரின் தோளின் இருபுறமும் பயணிக்க வேண்டியவர்களில் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் இயக்குநரின் மனக்கண்ணில் ஓடுவதை உள்ளது உள்ளவாறோ அல்லது அதற்கும் மேலாகவோ கச்சிதமாகத் தன் கேமராக் கண்ணுக்குள் அடக்கும் ஒளிப்பதிவாளரே ஒட்டு மொத்த படைப்பின் ஜீவனாகிறார். அப்படி இன்றும் நினைவில் வாழ்பவர் கேமராமேன் அசோக் குமார் யர்லி மார்னிங். மிஸ்ட் எனப்படும் பனியின் ஈரம் போர்த்திய தாவரங்களும் புதர்களும் சாலையின் இருபுறங்களிலும் இன்னும் உறங்கிக்க்கிட்டிருக்குது. ஹீரோவும் ஹீரோயினும் ஸ்டில் அவுட்டில் ‘ஜாகிங்’ போறாய்ங்க. காலடி ஓசையின் ‘தட் தட்’ ஒலியின் பின்னணியில் ஒரு பூவைப் போல் மலருது ஒரு பாடல். ‘பருவமே… புதிய பாடல் பாடு’. பனிப் படலத்தில் அமிழ்ந்து கிடக்கும் புல்வெளிப் பரப்பு, புதர்களுக்கு இடையில் படுத்திருக்கும் ஈரமான பாதைகள் என்று அழகாகக் காட்சிகள் விரியுது. அதிகாலையில் காணும் கனவு போன்ற அந்தப் பாடலில், மகேந்திரன், இளையராஜாவின் கற்பனையை உள்வாங்கிக்கொண்டு அத்தனை குளுமையாகப்…
Read More
KV குகனின் WWW ( Who, Where,Why) பன்மொழி படத்தின் டீஸரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

KV குகனின் WWW ( Who, Where,Why) பன்மொழி படத்தின் டீஸரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் இயக்கத்தில், ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் நடிக்கும் பன்மொழி திரில்லர் திரைப்படமான  WWW ( Who, Where,Why) படத்தின், டீஸரை வெளியிட்டுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இது குறித்து ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகன் கூறியதாவது... எங்கள் படமான WWW ( Who, Where,Why) படத்தின் டீஸரை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது எங்கள் அனைவருக்குமே பெருமை. படத்தின் டீஸர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் குறித்து நிறைய விசயங்களை ஆவலுடன் கேட்டறிந்தார். படத்தில் நடித்துள்ள மூத்த நடிகர்களான டாக்டர் ராஜேசேகர், ஜீவிதா தம்பதியின் மகள், ஷிவானி ராஜசேகருடைய நடிப்பையும், அவரது திரைப்பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் கூறினார். நடிகர் ஆதித் அருணை அவருக்கு நெடுங்காலமாக தெரியும். நடிப்பின் மீதான ஆதித் அருணின் தீவிரமான காதலையும் கடின உழைப்பையும் வெகுவாக பாராட்டினார். முழுப்படத்தில் அவரது  நடிப்பை காண ஆவலாக இருப்பதாக கூறினார்.…
Read More