“சின்னஞ்சிறு கிளியே”  இயற்கை மருத்துவத்தின் பெருமை சொல்லும் படம்

“சின்னஞ்சிறு கிளியே” இயற்கை மருத்துவத்தின் பெருமை சொல்லும் படம்

இயக்கம் - சபரிநாதன் முத்துப்பாண்டியன் நடிகர்கள் - செந்தில்நாதன், அர்ச்சனா கதை - பிரசவத்தில் தன் மனைவியை காவு கொடுத்த ஒருவனின் மகள் கடத்தப்படுகிறாள். அதன் பின்னணியில் உள்ள ஆங்கில மருத்துவ கோர முகமூடியை கிழித்து இயற்கை மருத்துவத்தின் பெருமையை அவன் வெளிக்கொண்டுவர முயல்கிறான் “சின்னஞ்சிறு கிளியே” உலகம் முழுக்க 24 திரைவிழாக்களில் கலந்துகொண்டு, விருதுகளை குவித்திருக்கும் படம். வருமுன் காப்போம் எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் நம் இயற்கை மருத்துவத்தின் பெருமையை சொல்ல முயன்றிருக்கிறார்கள். பல விசயங்களை சரியாகவும் பரபரப்பாகவும் சொல்லவும் செய்திருக்கிறார்கள். படத்தின் இடைவேளை வரை கதையில் எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை நாயகன் நாயகி சந்திப்பது, காதலிப்பது கல்யாணம் செய்வது அவர்கள் குழந்தை பிறப்பது என வழவழவென இழுத்து கொண்டிருக்கிறது, குழந்தை கடத்தப்படும் நொடியில் தான் படத்தின் உண்மையான கதை ஆரம்பிக்கிறது. அதன் பிறகு கதை பரபரவென செல்கிறது. இதை திரைக்கதையில் சரி செய்திருந்தால் இன்னுமே…
Read More