வித்தியாசமான க்ரைம்  உலகம்… பிளாக் கோல்டு  விமர்சனம்

வித்தியாசமான க்ரைம் உலகம்… பிளாக் கோல்டு விமர்சனம்

வெற்றி நடிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. நாம் அன்றாடம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு விஷயத்தின் பின்னால், இவ்வளவு பெரிய சர்வதேச வணிகமும், அதைக் கட்டுப்படுத்தும் மாஃபியா நெட்வொர்க்கும் இயங்குகின்றன என்பதை வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். தலைமுடி என்ற கருப்புத் தங்கம்! மனிதர்களின் தலைமுடி உலகம் முழுவதும் பெரும் வணிகப் பொருளாக விற்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய தலைமுடிக்கு சர்வதேச சந்தையில் இருக்கும் மதிப்பையும், அதன் பின்னணியில் இயங்கும் மிகப்பெரிய கொள்ளை வணிகத்தையும் மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வணிகத்தின் பின்னணியில் இருக்கும் மாஃபியா கும்பலிடம் ஒரு குடும்பத்தின் தந்தை சிக்கிக்கொள்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக மகன் மேற்கொள்ளும் போராட்டம்தான் படத்தின் மையக்கதை. ஒரு கொலைச் சம்பவத்தில் ஈடுபடும் மூன்று பேர், ரகசியமாக இயங்கும் அண்டர்கிரவுண்ட் கேங்கில் இருக்கும் இரண்டு பேர், அழகான குடும்பம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில் கதை நகர்கிறது.…
Read More