ஷோபா – நினைவிருக்கா?

ஷோபா – நினைவிருக்கா?

அச்சாணி படத்தில் அறிமுகமாகி, கே பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தில் பிரபலமாகி, பசி படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ஷோபா. ஊர்வசி என்ற விருதினை மத்திய அரசு அவருக்கு அளித்தது. அப்போது அவருக்கு வயது 17. அடுத்த சில தினங்களில் (மே1ல்) அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஷோபா பாலு மகேந்திராவின் இன்னொரு மனைவி!! ஷோபாவுக்கும் தனக்குமான உறவைப் பற்றி பாலு மகேந்திரா இப்படி வர்ணிக்கிறார்... "தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது? அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகை என்பதையா... நடிப்பில் மிகுந்த தனித்தன்மையையும் தனக்கே தனக்கென்று நிறையப் பிரத்தியேக கதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா... குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசோடு சதா வியப்பும் பிரமிப்புமாக பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா...? அந்த…
Read More
பாலுமகேந்திரா – மறக்க முடியாத படைப்பாளி!

பாலுமகேந்திரா – மறக்க முடியாத படைப்பாளி!

இலங்கையில் பிறந்தவருக்கு இயக்குநர்கள் டேவிட் லீன், சத்யஜித்ரே ஆகியோர்தான் மானசீக குரு. இருந்தாலும் போட்டோகிராபியே முதல்காதல் என்பதால் பயணம் அப்படி துவங்கியது.. எழுபதுகளின் துவக்கத்தில் மலையாள படங்களை ஒளிப்பதிவு செய்தவருக்கு, மிகப்பெரிய அளவில் பேசவைத்தது சட்டக்காரி என்ற படம்.. நடிகை லட்சுமிக்கு செமபிரேக்.. முதல் கணவர் மோகன் சர்மா உடன் நடித்த படம். இயக்குனர் கே எஸ் சேதுமாதவன். 1962- ல் கமலை மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய ஜாம்பவான். தமிழில் எம்ஜிஆரை வைத்து நாளை நமதே கமலை வைத்து நம்மவர் போன்ற படங்களை பின்னாளில் இயக்கியவர். இப்பேர்ப்பட்ட ஜாம்பவானின் படத்தில் பணியாற்றிய பாலுமகேந்திராவுக்கு அதற்குப் பிறகு ஏறுமுகம்தான்..சட்டக்காரி படம்பின்னர் இந்தியில் ஜூலியாக எடுக்கப்பட்டு அதிலும் லட்சுமி கிளாமராக கலக்கியதில் அகில இந்திய அளவில் தாறுமாறாக ஓடியது தனிக்கதை.. போட்டோகிராபியுடன் ஏழு முகத்தைக் கண்ட பாலுமகேந்திராவுக்கு டைரக்சன் செய்யும் ஆசையும் வந்துவிட்டது. 1977-ல் டைரக்டராய் கச்சிதமாய் கன்னடத்தில் செதுக்கியபடம் கோகிலா. கமலின்…
Read More