‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசினார். அவர் பேசும் போது, “இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா என்ற பாத்திரத்தின் பெயர் தான் ஞாபகம் வருகிறது.சொந்தப் பெயரை விட்டுவிட்டு கதாபாத்திரத்தின் பெயர் பேசப்பட்டால் அதுதான் அந்தப் பாத்திரத்தின் வெற்றி என்று சொல்லுவேன். நான் ‘திருப்பாச்சி’யில் பசுபதியை நடிக்க வைத்து இருந்தேன். அந்த படம் வெளியாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் பசுபதி என்னிடம் பேசினார் .”என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள்?” என்றார். என் படத்தில் நல்ல கேரக்டர் தானே அவருக்குக் கொடுத்து இருந்தேன். அவருக்கு நல்ல பெயர் தானே…
Read More
‘நீ சுடத்தான் வந்தியா’ பட பாடல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்!

‘நீ சுடத்தான் வந்தியா’ பட பாடல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்!

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர். இவ்விழாவில் படத்தைத் தயாரித்துக் கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் பேசும் போது, ” எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை .எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு படமாக எடுக்க முடிவு செய்தேன். பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை.எனவே வேறுவழி…
Read More
தனி ஈழம் கனவு நனவாகணும்!- ‘வா பகண்டையா’ பட இசை வெளியீட்டு விழா துளிகள்!

தனி ஈழம் கனவு நனவாகணும்!- ‘வா பகண்டையா’ பட இசை வெளியீட்டு விழா துளிகள்!

தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார். அவர் சில வருடங்களுக்குப் பிறகு மனதுக்கு இனிய பாடல்களைக் கொடுத்திருக்கும் படம் ‘வா பகண்டையா.’ உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இந்த படத்துக்கு கதை – திரைக்கதை – வசனம் எழுதி, இயக்கி, தனது ‘ஒளி ரெவிலேஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார் ப.ஜெயகுமார். புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் ஹீரோவாகவும், நிழன் வில்லனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில், ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள யோகி ராம் இன்னொரு வில்லனாக நடிக்கிறார். இவர்களோடு ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ நிதிஷ் வீரா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், மனோபாலா, ‘காதல்’ சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.கதை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பகண்டையா என்ற கிராமத்தில்…
Read More
ஆங்கிலப்படத்துக்கு இணையாக ஒரு புது விஷயத்தை சொல்லவரும் ‘விஷமக்காரன்’!

ஆங்கிலப்படத்துக்கு இணையாக ஒரு புது விஷயத்தை சொல்லவரும் ‘விஷமக்காரன்’!

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய்). அனிகா விக்ரமன் மற்றும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர். மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கையாளுதல் என்பது அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கூட உருவாக்கும். அந்தவகையில் இந்தப்படத்தின் கதையே மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல் என்கிற மையக்கருவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது விரைவில் தியேட்டர்களில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.. படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். பியார் பிரேமா காதல் இயக்குனர் இலன், 'பைனலி' பாரத் மற்றும் நீலு ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். படத்தொகுப்பாளர் மணிக்குமரன் பேசும்போது, இந்தப்படம் எடுப்பதற்கு முன்னால் இந்த கான்செப்ட் என்னவென்று அவ்வளவாக புரியவில்லை.. ஆனால்…
Read More
இருக்குறதை வச்சி எடுத்த படம் ‘முன்னா’ இசைவெளியீட்டு விழா துளிகள்!

இருக்குறதை வச்சி எடுத்த படம் ‘முன்னா’ இசைவெளியீட்டு விழா துளிகள்!

ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின் சங்கை குமரேசன் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பல சிறப்பு விருந்தினர்கள் லந்துகொண்டு சிறப்பித்தார்கள். விழாவில் இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசியது.. "சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் ரொம்ப மோசமான நிலையில் இருந்தார்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கம் மாறியிருக்கிறது அதனால் நல்லது நடக்கும். இந்த முன்னா படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகுங்கள். அவர்கள் உதவுவார்கள் என்றார். நடிகர் விக்னேஷ் பேசியது.. "வி.சேகர் படம் ரஜினி சார் படத்திற்கு சமமாக ஓடும். ஆர்.வி உதயகுமாரின் பெரிய ரசிகன் நான். இவர்கள் எல்லாம் இந்தப்படத்தைப் பாராட்ட வந்திருப்பதைப் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. இந்த விழாவிற்கு என்னை தம்பி புவன் அழைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் எனது அன்பான…
Read More
மாயத்திரை இசை வெளியீட்டு விழா !

மாயத்திரை இசை வெளியீட்டு விழா !

ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் "மாயத்திரை" படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது .அசோக் குமார். ஷீலா ராஜ்குமார் , இயக்குனர் சம்பத்குமார் , தயாரிப்பாளர் V சாய்பாபு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பூ சுந்தர் மற்றும் சுஹாசினி மணிரத்னம் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , செயலாளர் ,துணைத்தலைவர் ,பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர் . இந்த இசைவெளியீட்டு விழாவில் குஷ்பூ பேசியது : இங்கு சினிமாவைப் பற்றி மட்டும்தான் நான் பேச வந்திருக்கிறேன் .அரசியல் பற்றி அல்ல.தமிழக அரசிற்கும் ,மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். மதுபான கடைகளை அனைத்து இடங்களிலும் திறக்க அனுமதி வழங்கி இருக்கிறீர்கள் .அதேபோல் திரையரங்குகளையும் 100 சதவீதம் பார்வையாளர்கள் பார்க்க அனுமதித்தால் சினிமா நல்லபடியாக வளர எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் .கொரோனா காலத்திற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…
Read More