காடு எனக்கு கடவுளை விட மிகவும் பிடிக்கும் ! “கா” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஆண்ட்ரியா!

காடு எனக்கு கடவுளை விட மிகவும் பிடிக்கும் ! “கா” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஆண்ட்ரியா!

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட் ரியா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம், “கா”. இப்படம் மார்ச் .. திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில், இயக்குநர் நாஞ்சில் பேசியதாவது… மெசேஜ் சொல்வது என்பது சினிமா இல்லை என்பதை நான் நம்புகிறேன். சினிமா என்பது அனுபவம் அதிலிருந்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நடிகை ஆண்ட்ரியாவிற்கு நன்றி. படம் ஆரம்பித்தலிருந்து இன்று வரை உடன் நிற்கிறார். சலீம் கௌஸ் சார் அவரை நிறைய போராடித்தான் வர வைத்தேன். கதையை கடைசி வரை கேட்கவேயில்லை. என்னைப்பற்றி கேட்டார் எனக்கு பிடித்த இயக்குநர் பற்றி கேட்டார் பின் எனக்காக வந்தார். இனிமேலும் கதை கேட்க மாட்டேன் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடு வருகிறேன் என்றார். இப்போது அவர் இல்லாததது…
Read More
சுவாரஷ்யங்களை உள்ளடக்கிய அரண்மனை 3 படபிடிப்பு!

சுவாரஷ்யங்களை உள்ளடக்கிய அரண்மனை 3 படபிடிப்பு!

மக்கள் ரசித்து கொண்டாடிய அரண்மனை 1 & 2 படங்களைவிட அரண்மனை 3 படம் வித்யாசமாகவும் மிகச் சிறப்பான கதை அம்சத்துடனும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கின்றனர். அரண்மனை 3 ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இருக்கப் போவது உறுதியாகியுள்ளது. அரண்மனை 3 படத்தில் 12 அடி உயர லிங்கம் செட் போடப்பட்டு படமாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது பொதுமக்கள் அது உண்மையான லிங்கம் என்று நினைத்து கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து பூக்கள் தூவி பூஜித்துள்ளனர். இதனால் தினந்தோறும் சிறிது நேரம் படப்பிடிப்பை நிறுத்தி வைத்து பொதுமக்கள் பூஜை செய்து கலைந்து சென்ற பிறகே படப்பிடிப்பை தொடர்ந்துள்ளனர். அரண்மனை 3 படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு எதிர்பாராத அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் என்னும் ஊரில் மகாரானா ராஜ் ஸ்ரீ அமர் சிங் என்னும் ராஜ்புத் அரசரால் 1907ம் ஆண்டு கட்டப்பட்ட அரண்மனை வேண்கனியர் பேலஸ். இந்த…
Read More
வைல்ட் லைப் போட்டோகிராபர் கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “

வைல்ட் லைப் போட்டோகிராபர் கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து இதே ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். உலக மக்களுக்கான படம் இது. இன்று பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், மேற்கு தொடர்ச்சி மலை, மூணார் ஆகிய காடுகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை…
Read More
error: Content is protected !!