15
Jan
தயாரிப்பு : கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா நடிப்பு : ஜகபதி பாபு, ஒய்.ஜி. மகேந்திரன், தலைவாசன் விஜய், நிழல்கள் ரவி, சுகாசினி, ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் ஒளிப்பதிவு : சஞ்சய் இசை : தேவா புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு நினைவை ஒட்டி உருவாகியுள்ள ஆன்மிக – படைப்பு தான் இந்த அனந்தா. ஜியோ சினிமாஸ் மற்றும் சில ஓடிடி தளங்களில் வெளியான இந்த படம், பக்தி, நம்பிக்கை, மனித வாழ்க்கையில் இறை அருளின் தாக்கம் ஆகியவற்றை மென்மையான திரைக்கதையில் சொல்ல முயல்கிறது. ஆக்ஷன், கமர்ஷியல் படங்களைத் தந்த சுரேஷ் கிருஷ்ணா, இந்த முறை முழுக்க முழுக்க ஆன்மிக அனுபவத்தை திரையில் தந்துள்ளார். ஐந்து பக்தர்களின் வாழ்க்கையில் நிகழும் ஐந்து விதமான சம்பவங்கள் மூலம் ஐந்து கதையாக படம் நகர்கிறது. பணம், அதிகாரம் என்ற உலகத்தில் மூழ்கிய தொழிலதிபராக வரும் ஜகபதி பாபு, சாய்பாபா…
