அமீர் அடுத்த படத்து ஹிரோ யார் தெரியுமா?

அமீர் அடுத்த படத்து ஹிரோ யார் தெரியுமா?

இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் முதலாக குறிப்பிடத்தக்க படங்களைக் கொடுத்து திறமைமிகு இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆனால் இவர் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆதிபகவன் படத்தைத் தான் இயக்கியிருந்தார். தற்போது பல ஆண்டுகளுக்கு மீண்டும் இயக்கத்தில் களமிறங்கியுள்ளார். அமீர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தப் புதிய படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்துள்ளதாகக்.கூறப்படுகிறது. வெற்றிமாறன் இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுதுகிறாராம். வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருகறார். அந்தப் படத்திலும் சூரி தான் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது அமீர் படத்திலும் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக சூரியை இனி ஹீரோவாக மட்டுமே பார்க்கலாம் போலிருக்கிறது.
Read More
அமீர் நடித்த ’நாற்காலி’ பட பாடலை முதல்வர் வெளியிட்டார்!

அமீர் நடித்த ’நாற்காலி’ பட பாடலை முதல்வர் வெளியிட்டார்!

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நாற்காலி’. மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கும் இப்படத்தை ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்குகிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” என்ற எம்.ஜி.ஆர் பாடல் இடம்பெறுகிறது. இந்த நிலையில், எம்.ஜி.ஆர்-ன் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாற்காலி’ படத்தின் ”நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டார். முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாடல் குறுந்தகடை வெளியிட, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக்கொண்டார். இதோ அந்த பாடல்: https://www.youtube.com/watch?v=Xj9aju_o7IE&feature=youtu.be
Read More