03
Aug
திருநெல்வேலி மற்றும் கும்பகோணத்தில் அஜித்துக்கு சிலை அமைக்க, அவருடைய ரசிகர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார்கள். மேலும், அஜித் சிலையின் புகைப்படங்களும் தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக "அஜித்துக்கு சிலை வைப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறதே. இது குறித்து அஜித்திடம் ஏதேனும் பேசியுள்ளீர்களா" என இயக்குநர் சிவாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, "அஜித் சாருக்கு இது சுத்தமாக பிடிக்காது. அவர் இதை விரும்பவே மாட்டார். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ரசிகர்களாக இருக்கட்டும், படம் பார்க்க வருபவர்களாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் அஜித் சார் எப்போதும் சொல்வது ஒன்று தான். அம்மா, அப்பா, பார்க்கும் தொழில் அது தான் முக்கியம். அது போக தான் மற்றது அனைத்துமே. நல்ல படங்கள் யாருடையதாக இருந்தாலும், திரையரங்கில் போய் பார்த்து சந்தோஷமடைந்து, அதிலிருந்து ஒரு சில நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு போய் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் ஜெயிப்பது மட்டுமே சந்தோஷத்தைக் கொடுக்கும்.…