07
Jan
அழகி! தமிழில் ஏகப்பட்ட நபர்களை பாதித்த திரைப்படம். அந்த படத்தின் மூலம் காண்போர் ஒவ்வொருவரையும் நமது சொந்த ஊரின் நினைவுகளோடு ஒட்டி உறவாட வைத்தார் தங்கர்பச்சான். உணமையைச் சொல்லப் போனால் இன்றும் கூட எத்தனை தனம்....சண்முகம்..நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?. அதனாலேயே அப்படத்தை பார்த்த அத்தனை பேருக்கும் நூற்றில் தொண்ணூறு பேருக்கு தன் முதல் காதலை நினைவுபடுத்தியது அதிலும் காதல், நட்பு, பிரிவு, பொறாமை, சந்தேகம், பரிதவிப்பு, பாசம், மனிதாபிமானம், குழந்தைத்தனம், விட்டுக்கொடுத்தல், போன்ற எல்லா குணாதிசியங்களையும் ஒருங்கே காட்ட எப்படி முடிந்தது இந்த தங்கர்பச்சானால்? "என இந்த ஒற்றை படத்தை கண்டுவிட்டு வியந்தனர் ரசிகர்கள். சிம்பிளாக சொல்வதானால் மயிலிறகை கொண்டு கைகளில் வருடுவது போன்ற மென்மையான கதை. அறியாப் பருவத்தில் தெரியாமலே நம் மனதுக்குள் குடிகொண்டுவிடுகிற காதலும் காலாகாலத்துக்கும் அது பண்ணுகிற அவஸ்தை களும்தான் இந்த 'அழகி'யின் ஒன்லைன். பொதுவாக பெண்கள்தான் திரையில் துக்கமான காட்சிகள் வந்தால் உடனே…