கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் “ராயர் பரம்பரை”

கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் “ராயர் பரம்பரை”

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மெளனகுரு மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் படம் "ராயர் பரம்பரை". . கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டான மரடோனா, டூ ஸ்டேட்ஸ் படங்களின் கதாநாயகி சரண்யா நாயர் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், தெலுங்கு பட நாயகி மும்பை அனுசுலா மற்றும் மும்பை மாடல் கிருத்திகா என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். மேலும், KR விஜயா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா RNR மனோகர், கஸ்தூரி, பவர் ஸ்டார், கலக்கப்போவது யாரு தங்கதுரை, மிப்பு, கல்லூரி வினோத்,சரண்யா, லொல்லு சபா சேஷு, ஷாலு ஷம்மு மற்றும் பலர் நடிக்க செண்டிமென்ட் கலந்த மிகப்பெரிய காமெடி படமாக பொள்ளாச்சியில் தயாராகி உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் சூட்டிங் ஒரே schedule-இல் பிளான் செய்யப்பட்டு டிசம்பர் தொடங்கி பொங்கலுக்கு முன் முடிக்கப்பட்டது. மிரட்டலான சண்டைக் காட்சிகளுடனும், பல லட்சம் ரூபாயில் மிகப்பெரிய செட்…
Read More
விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ படத்தின் எடிட்டரும் அவரே!

விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ படத்தின் எடிட்டரும் அவரே!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்ததாக பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.  இவர்  நடிப்பில் வெளியாகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்று வரும் நிலையில், விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ மற்றும் `காளி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ‘அண்ணாதுரை’ படத்தில் புதிய முயற்சியாக படத்தின் படத்தொகுப்பு (Editing) பணிகளையும் விஜய் ஆண்டனியே மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் ஆண்டனி ஒரு எடிட்டராகவும் வலம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக இயக்குநர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாதுரை’ படத்தில் விஜய் ஆண்டனி ஆசிரியர், குடிகாரர் என இரு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் மற்றும்…
Read More