20
Apr
இயக்கம் - இளையராஜா கலியபெருமாள் நடிப்பு - சிபி ராஜ், நிரஞ்சனா பரபர திரில்லர் வந்து பல காலம் ஆகிவிட்டது. டென் ஹவர்ஸ் திரைப்படம் டிரெய்லர் வந்தபோதே மிக நன்றாக இருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி விட்டது. 10 மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பது தான் கதை. கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் அளிக்கின்றனர். அந்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ், அந்த பெண் கடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பதோடு, அப்பெண்ணை மீட்பதற்கான முயற்சியில் இறங்குகிறார். அப்போது, சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாகவும், அந்த பேருந்து கள்ளக்குறிச்சி அருகே சென்றுக் கொண்டிருப்பதாகவும் போலீஸுக்கு தகவல் வருகிறது. இதனால், அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி போலீஸ் சோதனை செய்யும் போது, புகார் அளித்த இளைஞர் அதே பேருந்தில்…